திருப்பூரில் தமிழர்கள் தாக்குதல்… நான் முதல்வராக இருந்தால் இப்படி நடக்குமா?

தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அண்மையில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் நடந்தது என கூறப்படுகிறது.மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்… திருப்பூரில் தமிழர்களை தாக்கிய வடமாநிலத்தவர்கள் குறித்த கேள்விக்கு.? தமிழர்களை தாக்குவது இது தொடக்கம் தான்., நாளை உங்களையும் தாக்குவார்கள். அவர்களை ஆதரிப்பதற்கு இங்கு ஒரு கூட்டம் உள்ளது. வட இந்தியர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர்கள். தமிழர்கள் எங்கு அடி வாங்கினாலும் அதை வேடிக்கை பார்த்து ரசிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. இது ஒன்றும் புதிதில்லை ஏற்கனவே நடந்துள்ளது இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மேலும் இது குறித்து நகைச்சவை நடிகர் மதுரை முத்து அவர்கள் உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை அவனியாபுரம் அருகே தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தென் மண்டல பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்._?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கண்ணுக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லை என்றால் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கண்ணு தெரியவில்லை.

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செய்ல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு.? யாரையும் தோற்கடிப்பதற்காக வேலை செய்யவில்லை., நாங்க வெல்வதற்கு தான் வேலை செய்வோம். கடுமையாக உழைப்போம்.கமலஹாசன் அது அவருடைய கட்சி சார்ந்த ஒன்று., நான் எப்போதும் தனித்து நிற்பேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் நிற்போம். திருப்பூரில் தமிழர்களை தாக்கிய வடமொழித்தவர்கள் குறித்த கேள்விக்கு.?தமிழர்களை தாக்குவது இது தொடக்கம் தான்., நாளை உங்களையும் தாக்குவார்கள். அவர்களை ஆதரிப்பதற்கு இங்க கூட்டம் உள்ளது. வட இந்தியர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர்கள். தமிழர்கள் எங்கு அடி வாங்கினாலும் அதை வேடிக்கை பார்த்து ரசிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. இது ஒன்றும் புதிதில்லை ஏற்கனவே நடந்துள்ளது இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

ஆளுனர் குறித்த கேள்விக்கு.?எங்களைப் பொறுத்தவரை ஆளுநர் என்ற பதவி அவசியம் இல்லாத ஒன்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு., மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் கையெழுத்து போட மாட்டார் என்றால் அது ஜனநாயக துரோகம்.நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் தமிழகம் இரண்டாம் இடம் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்., ஆனால் தமிழ்நாட்டின் பெயரை ஹிந்தியில் எழுதி வைத்துள்ளார்கள்.

திராவிடம் என்பது தமிழா.? திராவிடம் என்ற சொல்ல சமஸ்கிருத சொல். மாடல் என்பது ஆங்கிலம் அவர்கள் அப்படித்தான் தமிழை வளர்ப்பார்கள். திராவிடர்களின் தாய்மொழி தமிழ் அல்ல எங்கள் தாய் மொழி தான் தமிழ். நம்ம சென்னை., நம்ம சதுரங்கம்., நம்ம பள்ளி கட்டமைப்பு என்ற வார்த்தைகள் எல்லாம் வைக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மொழி சிதைந்தால் இனம் சிதையும் என பேசுவார்கள். இது எல்லாமே ஒரு ஏமாற்று. அதிமுக என்ற கட்சி இல்லை., அதனால் இப்பொழுது என்ன ஆகப்போகுது.? அதிமுக இருந்து என்ன நடந்தது.! நாங்கள்தான் எல்லா கட்சிக்கும் மாற்று இந்திய ஒன்றிய கட்சிகளான பாஜக காங்கிரஸ் அனைத்துக்கும் மாற்று. திராவிடம் என்பது ஒரு மாயை அது ஒரு கற்பினம். மாற்றுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். தெலுங்கு தேசிய கட்சி ஆரம்பிக்கும் போது கூட்டணி வைத்த காங்கிரஸ்., பாஜக., திராவிட இயக்கங்கள் அப்போது இனித்தது., தமிழ் தேசியம் என்றால் கசக்குதா.?பாஜக வளராது பாஜக வளர்ந்தால் என்னை மாதிரி தனித்து நிற்குமா சீமான் கேள்வி எழுப்பியவர். அப்படி வளர்ந்திருந்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நின்று தனித்துப் போட்டியிடலாமே. இந்த தேர்தலில் என்னுடைய வலிமையை நான் காட்டுவேன். நமக்கு வானூர்தி நிலையங்கள் புதிதாக தேவை இல்லை., வானூர்திகள் தான் தேவை. பறக்க வண்டி இல்லாத போது வானூர்தி நிலையம் எதற்கு.! ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேவையற்றது. இடைத்தேர்தல் வந்தால் ஒரு தொகுதிக்கு தேர்தலா.? ஒட்டு மொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தலா.? ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது ஜனநாயகத்தின் உறுதி தன்மையே சீர்குலைத்து விடும். இவர்கள் சொல்வது தம்பி புரட்டா சூரி காமெடி போல எல்லா கோட்டையும் மொத்தமாக அழியுங்கள் என்பதுபோல.

பழனி குடமுழுக்கு நாளை நடைபெற உள்ளது தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த கேள்விக்கு.?தமிழில் அர்ச்சனை செய்வதற்கு சட்டப் போராட்டங்கள் பலவற்றை செய்கிறோம். நம் முன்னோர்கள் செய்த பிழை. இறை என்னுடையது., கோவில் என்னுடையது. என்னுடைய தாய் மொழியில் வழிபடுவது தான் முறை. இறைவன் தந்த மொழி தமிழ். நான் முதல்வராக வந்தால் தமிழில் வழிபடு இல்லை என்றால் கதவை இழுத்து மூடு என்று உத்தரவிடுவேன். திமுகவினால் நின்று சண்டை போட முடியாது., சமரசம் தான் செய்வார்கள் சரணடைவார்கள். உள்ளத்தில் தூய்மை இல்லை கையில் சுத்தம் இல்லை அவர்கள் வருமான வரி சோதனைக்கு பயப்படுவார்கள். எங்கள் மொழிக்கு பாதுகாப்பு இல்லை., திராவிடர்கள் ஆளும் வரை தமிழுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழர் தமிழ்நாட்டை ஆள வேண்டும். தமிழ்நாட்டுச் சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது நான் வரவேற்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!