திருமங்கலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிறு, சிறு குழந்தைகள் பங்கேற்று கோரிக்கை – நான்கு வழி சாலையின் குறுக்கே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தரவும், பெரும் உயிரிழப்பை தடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் கிராமத்தில் , குடியரசு தின விழாவின் கிராம சபை கூட்டம் கிராம மந்தையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐந்து வயது குழந்தைகள் முதல் 15 வரை குழந்தைகள் வரை 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பெண் குழந்தை ஒருவர் பேசும்போது,, கிராம பஞ்சாயத்தில் உள்ள பி ஆர் சி காலனி பகுதிகளில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், மழையிலும், வெயிலிலும் கிராம மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது என குற்றம் சாட்டினார். அதற்கு கிராம பஞ்சாயத்து தலைவர். ஆனந்தி, அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தனக்குன்குளம் முதல் சமயநல்லூர் வரை போடப்பட்ட நான்கு வழி சாலையின் குறுக்கே, தனக்கன்குளம், சாக்கிலிப் பட்டி, வெங்கலமூர்த்திநகர், கீழக்குயில்குடி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்து செல்லும் நிலை உள்ளதால், நாள்தோறும் அங்கு பெரும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு, நான்கு சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைத்து தர மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.