கம கமக்கும் பிரியானி திருவிழா… பாத்திரங்களோடு குவிந்த மக்கள்!

2500 கிலோ அரிசி, 150 ஆடுகள், 500-க்கு மேற்பட்ட சேவல்கள் கொண்டு சமைத்த பிரியாணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 88வது ஆண்டாக நடைபெற்ற முனியாண்டி கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கப்பட்ட பிரியாணி பிரசாதத்தை பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிச் சென்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற 88 வது ஆண்டு பூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் – பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படும் இரண்டு நாட்களாக கம கம பிரியாணி வாசனையில் தத்தளிக்கும் கிராமம்.(2500 கிலோ அரிசி, 150 ஆடுகள், 500-க்கு மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி சமையல்) மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் , ஸ்ரீ முனியாண்டி சுவாமி – க்கு தாய்க் கிராமமாக கருதப்படும் இக்கிராமத்தில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஸ்ரீ முனியாண்டி சுவாமி – க்கு திருக்கோயில் அமைந்ததாக வரலாறு கூறப்படுகிறது .

இந்நிலையில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று திருக்கோயிலில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்தும் தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக கடைக்கு விடுமுறை அளித்து , இக்கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்று கூடி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வதுடன், முன்னதாக நேற்று இரவு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து சுவாமிக்கு பூஜை

பொருட்களான பழங்கள், மலர் உள்ளிட்டவற்றை தலைசுமையாக ஊர்வலமாக எடுத்து புறப்பட்டு, திருக்கோயிலை அடைந்து பூஜை நடத்தினர்.இவ்விழாவிற்காக ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்துபவர்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி , வெளிநாடுகளில் இருந்தும் குடும்பத்துடன் பங்கு கொள்வர். இதனை தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 2500 கிலோ அரிசி மற்றும் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு கிராமத்திலேயே பிரியாணி சமைக்கப்பட்டு , அங்கு கூடும் அருகாமையில் உள்ள கிராமங்களான கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணியை வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக பிரியாணி பிரசாதம் வாங்குவதற்காக , கிராம மக்கள் பாத்திரங்களை கையில் ஏந்தி கொண்டு , திருக்கோயில் முன்பு, வரிசையாக காத்திருந்து பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். இவ்விழா காரணமாக , இரண்டு நாட்களாக வடக்கம்பட்டி கிராமம் கம கம பிரியாணி வாசனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!