Happy Birthday: மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கிய தொண்டர்!

திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசளித்தார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சருக்கு பரிசளிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர்சா என்ற திமுக தொண்டர் ஒட்டகத்தை அழைத்து வந்திருந்தார். இதனால் இப்பகுதியில் அனைவரது கவனமும் ஈர்க்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் வருடம் வருடம் எங்கள் கட்சியின் தலைவர் ஸ்டாலின்-க்கு உயிருடன் உள்ள ஆடு, மாடு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறி வருவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் 2 வயது பூர்த்தியான ஒட்டகத்தை பரிசளிக்க வந்ததாகவும், ல் ஸ்டாலின்க்காக என் உயிரைக் கூட தருவேன் என அறிவதற்காக உயிருடன் உள்ள ஒட்டகத்தை பரிசாக அளித்தேன் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!