திருப்பூரில் பெட்ரோல் இலவசம்..

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூரில் பெட்ரோல் விலை 102 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். மீண்டும் தொழிலாளர்கள் திரும்பி வந்தாலும் தொழிலாளர்கள் தேவையும் அதிகரித்தது உள்ளது.

திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் வேலை செய்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என மின் கம்பங்களில் கட்டி விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூரில் ஒருவாரம் முழுமையாக வேலைக்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற விளம்பரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!