லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓ..வைரலாக பரவும் வீடியோ.

விவசாயிகளிடம் விஏஓ லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதால் நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் தங்களது பயிரை காப்பீடு செய்து வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு விவசாயியும் தங்களது வயல்களில் தான் நெற்பயிர்களை பயிரிட்டு உள்ளோம் என்பதை உறுதியளிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா, அடங்கல் வாங்கி அதனை பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல் வாங்குவதற்கு விவசாயிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நெற்கட்டும் சேவல் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் சிட்டா அடங்கல் வழங்குவதற்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கருக்கு ரூ.300 வீதம் பணம் வசூலித்துள்ளார். இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.இதையடுத்து லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்,விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


 

Leave a Reply

error: Content is protected !!