
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் குறைவான மின் அழுத்த பிரச்சனையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருநகர் அருகே உள்ள எஸ்.ஆர்.வி நகர்,அல்லித்தெரு, சூரிய காந்தி தெரு, தாழம்பூ தெரு, சீனிவாசா நகர், பெருமாள் கோவில் தெரு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மின்னழுத்தம் குறைவாக வருவதாகவும் இதனால் மின்விளக்கு, மின்விசிறி,ஏசி, பிரிட்ஜ், மின்மோட்டார் போன்ற மின் சாதனங்கள் சரிவர இயங்கவில்லை என்றும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மின்வாரிய மின் பொறியாளர் அவர்களுக்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் குறைவான மின் அழுத்தத்தை சரி செய்ய மின்மாற்றி ( டிரான்ஸ்பார்மர்) பொருத்தப்பட வேண்டும் மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) பொருத்துவதற்காக இடம் தாருங்கள் மற்றும் மின் இணைப்பு சாதனங்கள் வாங்கி சரி செய்யக்கூடிய மின் பணிகளுக்கு தேவையான செலவுகளை பொதுமக்கள் தரவேண்டும் என மின் வாரியத்தினர் கூறுகிறார்கள் என்று பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.
எனவே உடனடியாக மின் துறையினர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து குறைவான மின் அழுத்த பிரச்சனையை சரி செய்து தரும்படி இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.