
மதுரை மாநகர் P.T.R சிலை நத்தம் ரோடு சந்திப்பில் பறக்கும் பாலம் இணைக்கும் பணி ஆரம்பிக்க இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் நலனை கருத்தில்கொண்டு கீழ்க்கண்டவாறு சிறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

PTR சிலை சந்திப்பில் இருந்து நத்தம் ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் காவல் நிலையம் வழியாக SP பங்களா சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி செல்ல வேண்டும்.
நத்தம் சாலையில் SP பங்களா சந்திப்பிலிருந்து PTR சிலை சந்திப்பிற்கு இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மத்திய ரக மற்றும் கனரக வாகனங்கள் SP பங்களா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி உலா சாலை, தாமரைத்தொட்டி சந்திப்பு, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.
மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.