
குவியும் பாராட்டுகள்: காவலர்கள் சங்கமம் சார்பில் 14 லட்சம் நிதியுதவி…
இராஜபாளையம் அருகே வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் இயற்கை மரணம் அடைந்த அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் 14 லட்சம் நிதி உதவி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெகநாதன் வயது 50 இவர் ராஜபாளையம் அருகே வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் சங்கமம் சார்பில் வெங்கடேஷ் தலைமையில் தமிழகம் முழுவதும் பணி புரியும் காவலர்கள் 1997 முதல் பேஜ் சார்பில் 2655 காவலர்கள் சார்பாக 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து அவரது குடும்பத்திற்க்கு மகன் கிருபாகரன்.மகள் ஹரிணி பெயரில் தலா 5 லட்சம் விதம் வங்கியில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு மீதமுள்ள நான்கு லட்ச ரூபாயை அவரது மனைவி லட்சுமி அவர்களிடம் ரொக்கமாக வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.