
தீப்பிடித்து எரிந்த ATM இயந்திரம்… விரைந்து வந்து பல லட்சம் ரூபாயை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் – விருதுநகர் சாலையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை, ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறையிலிருந்து கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் அங்கிருந்த குளிர்சாதன எந்திரம் மற்றும் ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனைப் பார்த்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள், தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் 2 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் மின் சாதனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. பணம் இருந்த எந்திரத்தின் மேல் பகுதியில் மட்டும் தீப்பிடித்ததால், நல் வாய்ப்பாக பல லட்சம் ரூபாய் பணம் தீயில் இருந்து தப்பியது. விபத்து குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.