மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
மதுரை மாவட்டம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் போராட்டம்.பள்ளி வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள்தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
புதுக்கோட்டை
அன்னவாசல் பகுதியில் பொன்னுரங்க தேவாலய வளாகத்தில் காய்கறி திருவிழா தொடங்கியது. சாதி, மத பாகுபாடுகளை கடந்து நடத்தப்பட்டு வரும் காய்கறி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. காய்கறி திருவிழா தொடங்கிய நிலையில் தேவாலயத்தில் சுமார் 5,000 மக்கள் ஒன்று கூடி வழிபட்டனர்
கிருஷ்ணகிரி
கர்நாடகாவில் இன்று நடைபெறும் பந்த் காரணமாக எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம்.ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தம்
நீலகிரி
உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான மலர் கண்காட்சியை அமைச்சர் ராமசந்திரன் தொடங்கிவைத்தார்.70 வகையான செடிகள் கொண்ட 21,000 மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சேலம்
மேட்டூர் அனல் மின்நிலையத்தின் 2-வது பிரிவில் கொதிகலன் குழாயில் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை
கர்நாடக வங்கி, அதன் ஏ.டி.எம். மையங்கள், கர்நாடகத்தினரின் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள கர்நாடக வங்கி, ஏ.டி.எம்., ஓட்டல்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர்
வெள்ளி கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.வெள்ளி கடற்கரையில் நெய்தல் புத்தக திருவிழா இன்று தொடங்கவுள்ள நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு வந்த பயணிகள் ஏமாற்றம்
திருவள்ளூர்
புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*நெப்போலியன், சங்கர், சபரி, அப்புன்ராஜ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி
கர்நாடகாவில் முழுஅடைப்பு காரணமாக உதகையிலிருந்து மைசூரு, பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம். உதகையில் இருந்து வழக்கமாக காய்கறி ஏற்றிச்செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேயிலை எடுத்து செல்லும் பத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொரப்பள்ளி, மசினகுடி, கக்கநல்லா சோதனை சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடலூர்
விருத்தாசலம் மணிமுத்தாற்றின் கரையில் விடிய, விடிய சட்டவிரோத மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் ஆய்வு செய்து சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்த வலிவுறுத்தியுள்ளார்.
__________________________
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.