
தங்கமலை எனும் திருவண்ணாமலையின் மறுபக்கம்… பலரும் அறியாத அருணையின் வரலாறு!
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் திருவண்ணாமலையின் சிறப்புகளைப் பற்றி சிவன் அடியார்கள் பலரும் சிறப்பாக எழுதியுள்ளனர். அதில் சிலவற்றை உங்களுக்கு தொகுத்து அளித்துள்ளோம்.
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.
சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை :
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.
இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் நிறைந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் பால ரமணர் தவம் செய்த இடம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
தங்கமலை :
மிகப்பழமையான திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
திருவண்ணாமலை கிரிவலம் :
திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது.
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.

14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை :
மலையின் உயரம் 2,688 அடி. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
பவுர்ணமி கிரிவலம் :
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

செந்தூர விநாயகர் :
கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.
நந்திக்கு பெருமை :
மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
தீபதரிசன மண்டபம் :
அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
திருப்புகழ் அருணகிரியார் :
திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
மீனின் பெயர் செல்லாக்காசு :
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
கரும்புத்தொட்டில் :
அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம். தேரோட்டம் நாளில் ஏராளமான பக்தர்கள் கரும்புத்தொட்டில் கட்டி வந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இத்தனை சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.
ஆலயத்தின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். விநாயகரின் ஆறு படை வீடுகளில் இதுவும் ஒன்று. பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்) இருக்கிறது. தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)உள்ளது. மேற்கில் பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்) என்று 9 கோபுரங்கள் உள்ளன.
திருவண்ணாமலையில் உள்ள மலையின் உயரம் 2,688 அடி (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
திருவண்ணாமலையில் உள்ள மலையின் உயரம் 2,688 அடி (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
மலையின் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையின் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.(Freepik)
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்..
சிவமும் சக்தியும் : சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. கார்த்திகை மாத சிறப்பு சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ‘அண்ணாமலையானுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிடுவார்கள். ‘இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்’ என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் சிறப்பு : தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ — பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதாகும். வைகுண்ட வாசல் சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை ‘வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
விநாயகருக்கு செந்தூரம் :
ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், இந்த தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். இது தனி சிறப்பாக இருந்து வருகிறது. மாட்டு பொங்கல் சிறப்பு மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.

முருகன் காட்சியளித்தார் : அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்’ (கம்பம் – தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார். இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளினார் இந்த இரண்டு முருகனின் தரிசனமும் மிகவும் விசேஷம்.
முக்கியமாக தரிசிக்க வேண்டியவை பிரம்ம லிங்கம், யோக நந்தி, பாதாள லிங்கம், கிளி கோபுரம், அருணகிரி யோகேசர் ஆகியவை முக்கியமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டியவையாகும். பெளர்ணமி கிரிவலம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் வாழும் மலை :
திருவண்ணாமலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகவும், இன்றளவும் கூட அவர்கள் வாழ்ந்து வருவதாகவும், சிலர் சித்தர்களை நேரில் கண்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆட்டோ கிரிவலம் ஏறத்தாழ 14 கிலோமீட்டர் தூரம் இந்த மலையை சுற்றி வர முடியாதவர்கள். பகல் நேரத்தில் ஆட்டோ பிடித்து மலையை சுற்றியுள்ள சிறு சிறு கோயில்களை தரிசனம் செய்து வருவதை இங்கு ஆட்டோ கிரிவலம் என்கின்றனர்.
திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
- திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
- திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.
- வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.
- வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
- திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.
- திருவண்ணாமலை ஈசனை “தீப மங்கள ஜோதி நமோ நம” என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
- ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.
இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.
- திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
- மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
- திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.
- திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.
- கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.
அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.
- திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.
- கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.
பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
- திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.
- திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.
- திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்” இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
- பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.
- இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
- வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.
- அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.
- இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.
தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
- கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.
- விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
- 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
- வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.
ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில்.
இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன.
இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர்.
மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.
திருண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. அங்கு சிவபெருமானே அண்ணாமலையாராகக் காட்சி தருகிறார்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும் என்கிறார்கள்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும் என்கிறார்கள்.
நகரின் மையப்பகுதியில் சிவன் நெருப்பாக நிற்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். இது 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்களும் ஆலயத்தின் உள்ளே 6 பிராகாரங்களும் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என்று அமைந்திருக்கிறது.
நகரின் மையப்பகுதியில் சிவன் நெருப்பாக நிற்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். இது 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்களும் ஆலயத்தின் உள்ளே 6 பிராகாரங்களும் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என்று அமைந்திருக்கிறது.
ஆலயத்தின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். விநாயகரின் ஆறு படை வீடுகளில் இதுவும் ஒன்று. பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பை தான் நாம் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுகிறோம். சிவன் குடியிருக்கும் தலங்களில் நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பை அடிப்படையாய் கொண்டு இருக்கும் தலங்களை தான் நாம் சிவனின் பஞ்ச பூதத் தலங்கள் என்று கூறுகிறோம்.

இதில் தமிழகத்தில் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் திருவண்ணாமலை சிவனின் தலங்களில் நெருப்பை குறிக்கிறது. மாதாமாதம் இங்கு பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதை மக்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.
சித்திரா பௌர்ணமி (சித்திரை மாதம்), கார்த்திகை தீபம் (கார்த்திகை மாதம்), மாட்டுப் பொங்கல் போன்றவை இங்கு திருவிழா போல கொண்டாப்படுகின்றன. இது மட்டுமின்றி சிவனின் உக்கிரமான தலம் என்று கூறப்படும் திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் இருக்கின்றன.
சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய சிறப்பு பெற்ற தலம் ஆகும். ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும் ரமண மகரிஷி திருவண்ணாமலை எனும் இந்த தலத்தில் தான் தவம் இருந்தார். இது இந்த தலத்தின் மற்றுமொரு தனி சிறப்பாக இருந்துவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.