பல்லடம்: சாலைப்பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்..கொ.ம.தே கட்சியினர் கோரிக்கை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட மாணிக்காபுரம் ரோடு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது பணிகள் முழுமை அடையாமல் பாதியில் நிற்பதால் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்பவர்களும் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளதால் நகராட்சி நிர்வாகம் சாலை விரிவாக்கப் பணிகளை விரைவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை விரிவாக்கப் பணியை வேகப்படுத்த வேண்டும் எனவும்

வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் கரைப்புதூர் யூனியன்
மாவட்ட கவுன்சிலர் கொங்கு ராஜேந்திரன் அவர்கள் பல்லடம் நகர்மன்ற தலைவரிடம் புகார் மனு கொடுத்தனர் உடன் நகர தலைவர் ஆறுக்குட்டி, நகரச் செயலாளர் வெங்கடேஷ், நகர பொருளாளர் சண்முகம், நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர், கொங்கு வீரக்குமார்
மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!