
தமிழ் நாட்டில் கும்மிடிப்பூண்டியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவி வாழும் நமது ஆயர் இடையர் கோனார் சமூக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தற்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.
ஆகையால் தமிழ்நாடு மாநிலத்தில் இடையர் சமூகம், 56 பட்டங்களிலும் பல கிளை பெயருடனும் வாழ்ந்து வருகிறோம்.
தமிழ் இடையர்கள் இருந்து பிரிவுகளில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். கோனார், பிள்ளை, நம்பி மற்றும் கரையாளர் இன்னும் சில ஆனால் பெரும்பான்மை மக்களின் பட்டம் கோனார் என்பதே. மற்றவை பிற்காலத்தில் பிற தொழிலால் ஏற்பட்டது. ஆகையால் எல்லோரும் கோனார் என்றே பதிவிடுவோம்.
அரசு நம்மிடம் கேட்கும்போது நமது பட்டங்களை கூற வேண்டாம்.
“தமிழ் கோனார்” Tamil konar ” என்றுதான் கூற வேண்டும்.
தப்பி தவறி கூட “யாதவர்” YADAVAR” என்று கூறிவிட வேண்டாம்…!
“யாதவ், யாதவர், யாதவா ” என கூறினால் நாம் வட நாட்டில் இருந்து வரும் வந்தேறி கூட்டத்தில் சேர்த்து விடுவார்கள். அதேபோல் இதுவரை தமிழக வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் Yadava என்பதில் (இடையர், வடுக ஆயர், வடுக ஆயர், கெல்லா மற்றும் அஸ்த்திராந்த கொல்லா) என்ற பெயரில் இடஒதுக்கீடு நான்கு பிரிவு பிற மொழியினர்கள் ஒதுக்கீட்டை வாங்குகிறார்கள்.
இந்திய அளவில் எல்லோரும் OBC என்றே இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டில் பிற மொழியாளர்களுக்கு மொழி சிறுபான்மை என்ற அடிப்படையில் தான் வேலை வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மட்டும் பூர்வ குடி மக்களோடு பிற மொழியாளர்கள் ஏன் இட ஒதுக்கீட்டில் பங்கு போட வேண்டும்.
இந்தி அளவில் அரசாட்சியை அமைத்திட ஒரு இனம் இன்னொரு இனத்தோடு, ஒரே தொழில் செய்வோர் கூட இணைந்து ஆட்சியை நிறுவுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மாநிலத்தில் அந்த மொழியினருக்கே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
இங்கு வாழும் பிற மொழியாளர்களை நாம் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் இங்குள்ள தமிழர்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம்.
பத்து பேரோடு ஓட வேண்டிய நம் பிள்ளைகளை நூறு பேரோடு ஏன் ஓட வைக்க வேண்டும்.
இந்திய அளவில் யாதவா என்று ஒருங்கிணைத்து யாரை ஆட்சிப்பீடத்தில் அமர வைக்க இத்தனை வேலை? ஒரு தமிழ் இடையரை ஆள வைக்கவா? அதைத்தான் வடக்கு ஏற்றுக்கொள்ளுமா?
நம்ம தலைமுறைக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும்.
அதனால் ஜாக்கிரதையாக “தமிழ் கோனார்” என்றுதான் கூற வேண்டும்.
ஒவ்வொரு கிராம, நகர, ஒன்றிய, தாலுகா வாரியாக துண்டு பிரசுரங்களை கொடுத்து வேலை செய்ய வேண்டும்.
யார் வந்து கேட்டாலும் தமிழ் கோனார் என்று கூறும்படி அன்போடு கேட்டு கொள்கிறோம் என தாய்நாடு மக்கள் கட்சியின் தலைவர் ஏ.கே.பூமி ராஜன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.