பீர் தட்டுப்பாடு: கொந்தளிக்கும் பீர் பிரியர்கள்! அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல்…

தற்போது கோடை வெயில் 104 டிகிரிக்கு மேல் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. கோடைக்காலம் என்பதால் பீர் விற்பனை எப்போதுமே மதுபானக் கடைகளில் அதிகம் இருக்கும்.கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் என கிடைத்து வந்தது. கடந்த 3 நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை.

குடிமகன்களும் பல கடைகளில் தேடி அழைந்து பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர்ரக மதுபானங்கள் வரவு அதிகரித்துள்ளதாலும் குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.என்னதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என மதுபான பாட்டில்களில் எச்சரிக்கை வாசகம் லேபிளில் ஒட்டி வைத்தாலும் “ஹாட் அடிச்சாதான் தப்பு.. பீர் அடிக்கலாம் ஒண்ணு ஆகாது” என நம்பிக் கொண்டு இளைஞர்கள் கூட அதிக அளவில் தமிழகத்தில் பீர் அருந்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

எப்போதுமே பீர் விற்பனை டாஸ்மாக் மதுபானக் கடைகளில் படு ஜோராக விற்பனையாகும். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் கூலிங்காக கிடைக்கும் பீர்களை வாங்கி அருந்தும் பீர் பிரியர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகம்.

மதுபானக் கடைகளில் “ஃப்ரீசர் வெச்சிகிட்டே கூலிங்கா பீர் ஏன் இல்லைன்னு சொல்றீங்க” என ஊழியர்களிடம் அன்புச் சண்டை போடும் பீர் பிரியர்கள் இங்கே அனேகம்.சில மதுபானக் கடைகளில் கூலிங் பீர் வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.15 வரை செலுத்தக் கூறுவார்கள். ஏற்கனவே எம்ஆர்பியைக் காட்டிலும் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை அனைத்து மதுபானங்களுமே விற்பனை செய்யப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகளை மதுபானப் பிரியர்கள் வைத்து வருகிறார்கள்.

ஆனாலும் கூலிங் பீர்களுக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்தி சிலர் வாங்கிச் செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் அப்படியும் பீருக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தட்டுப்பாடு நிலவுவதால் பீர் பிரியர்கள் கடும் கோபத்திலும் மன உளைச்சலிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் (ஏஐடியுசி) தலைவர் என்.பெரியசாமி, வெளியிட்ட அறிக்கையில், “பீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் சப்ளை குறைவாக உள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள்தான் பீர் பற்றாக்குறைக்கு காரணம் என பீர் பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கொள்முதல் விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பீர் கொள்முதல் செய்து தமிழகத்தில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கையை கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுக்க வேண்டும் என்பது பீர் பிரியர்களின் உடனடி கோரிக்கையாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!