
நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணியாக இருப்பது போதைப் பொருட்கள். இவற்றை ஒழிப்பதன் மூலம் வன்முறை சம்பவங்களை குறைக்க முடியும்.ஒரு சமூகம் குற்றங்கள் அற்ற சமூகமாக இருக்க வேண்டுமானால் அங்கு போதைப் பொருட்கள் இல்லாது இருக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கூகுள் பே, போன் பே, பேடி எம் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்ளுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அப்போது அனுமந்தபுரம் அருகே பைக்கில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர். அவர்களை துரத்தி சென்ற போலீசார் பாலக்கோடு அருகே மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பொட்டலம் பிடிபட்டது.
அதனை தொடர்ந்து அவர்களை விசாரித்ததில் காரிமங்கலம் அருகே ஆல முரசுப் பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 40), வையாலி கொட்டாய் பகுதியை ராமமூர்த்தி (30) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரித்ததில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இங்கே விற்பனை செய்தது தெரிய வந்தது.
குற்றவாளிகளை பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி இது குறித்து வழக்குப்பதிவு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்னர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.