
தாயாரை சந்திப்பதற்கு வர வேண்டாம்: சாந்தன் சகோதரரின் உருக்கமான கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானகிய சாந்தனின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாந்தன் மரணம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் 32 ஆண்டுகளுக்கு மேலான தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
பலரும் தங்களது அன்றாட வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சாந்தனால் சட்ட சிக்கல் ஏற்பட்டமையால் இலங்கை செல்ல முடியாமல் போயிற்று.

எனவே இவர் திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
உடல் நல குறைவு காரணமாக நேற்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது சகோதரன் மதிசுதா தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாந்தன் சகோதரனின் கோரிக்கை
“இந்த ஒன்றரை வருடங்களாக போராடியும் அண்ணனை மீட்க முடியவில்லை. இந்த துயர செய்தியை அம்மாவிடம் கூறுவதற்கு எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது.
அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கிறேன். யாரையும் சந்திக்கவில்லை என கோபித்துக்கொள்ள வேண்டாம்.
நேரில் வர விரும்புபவர்கள் 2 நாட்களின் பின்னர் வர முடியுமா? என் தாயின் நிலை இனிமேலாவது எந்த தாய்க்கும் வராமலிருக்கட்டும்” என தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.