சேவையே கடவுள்: M.G.R அளவுக்கு இல்லை… எல்லோரும் சிரித்தார்கள்…. ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

சேவையே கடவுள்: M.G.R அளவுக்கு இல்லை… எல்லோரும் சிரித்தார்கள்…. ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

எம்.ஜி ஆர் மாதிரி இல்லனாலும்.. அம்மா பிறந்தநாளில் அறக்கட்டளை தொடங்கிய ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

சேவையே கடவுள் அறக்கட்டளை இப்படியான நிலையில் ’சேவையே கடவுள்’ என்கிற அறக்கடளை ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளையில் லாரன்ஸூடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட இருக்கிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்கிற செயல்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தத் திட்டத்தின் வழியாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்ய இருக்கிறார். இதில் முதல் கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் 10 கிராமத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசியவதாவது:

“என்னை இந்த அளவுக்கு வளர்த்தது என் அம்மாதான். என் சின்ன வயதில் என் மகனை எம்.ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்று அம்மா சொல்லியிருக்கிறார். அப்போது எல்லாரும் சிரித்திருக்கிறார்கள். எம்.ஜி ஆர் அளவுக்கு இல்லை என்றாலும் அவரில் சிறிய அளவிலாவது நான் செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!