அதிரடி: இன்ஸ்டாகிராமில் இனி உங்கள் வயதை மறைக்க முடியாது..!

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள 18+ பதிவுகளை சிறுவர்கள் பார்ப்பதை தடுப்பதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 முறைகள்

புதிதாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்குபவர்கள் உங்களது பிறந்த தினம் இருக்கும் வகையிலான அடையாள அட்டையை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். அதன் மூலம் வயதை கண்டறிய முடியும்.

அந்த வீடியோவை வைத்து, வயது சரிபார்க்கும் யோடி (Yoti) மென்பொருள் உங்கள் வயதை அறியும்.
வயதை அறிந்த பின் உங்களது செல்பி வீடியோ தானாக அழிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் நீங்கள் 18 வயதுக்கு குறைவாக இருப்பின், உங்கள் வயதிற்கேற்ற பதிவுகளை மட்டுமே இன்ஸ்டாகிராமில் காட்டப்படும்.

இதன் மூலம் சிறுவர்கள் தேவையில்லாத பதிவுகளை பார்ப்பதை தடுக்க முடியும் என நம்புவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

செல்பி வீடியோ மூலம் வயதை அறியும் முறை ஏற்கனவே ஆன்லைன் பேங்கிங் செயலிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!