
ராமநாதபுரத்திற்கு இனி அந்த பிரச்சனை இருக்காது! திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்!
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஆர் எஸ் மடை பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு ஆலுயர மாலை அணிவித்து பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குடிதண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும்:
கல்வியிலும் மருத்துவத்திலும் திமுக அரசு இரு கண்களாக பாவித்து வருகிறது அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கி சிறந்து விளங்க பாடுபடுவேன் என ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திட்டவட்டம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கடந்த சில தினங்களாக சட்டமன்ற தொகுதி முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார்
அதன் அடிப்படையில் நேற்று இராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பால்கரை, ஆர்.எஸ்.மடை, கண்மாய், பசும்பொன் நகர், அச்சடிபிரம்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அவர் செல்லும் கிராமங்கள் தோறும் அவருக்கு தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவியும் மலர் மாலை அணிவித்து குலவையிட்டு வீரவால் கொடுத்து வரவேற்பு அளித்தனர்
அதன் பின்னர் ஆர் எஸ் மடை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் எனவும் காவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 90% பணிகள் முடிவடைந்து விட்டது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிவடைந்து குடிநீர் பிரச்சனை என்பதே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இருக்காது என்றும் திமுக அரசு கல்வியிலும் மருத்துவத்திலும் இரு கண்களாக பாவித்து முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கல்வியிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்க பாடுபடுவேன் என தெரிவித்தார். ஆர் எஸ் மடை பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளைஞரணி துணை அமைப்பாளர் கபில்தேவ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் வரவேற்பு அளித்து வீரவாள் பரிசளித்து பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.