மழை நீர் தேக்கம்.. சமையல் செய்ய முடியாமல் சாலை மறியல்.!

மழை நீரை அப்புறப்படுத்த கோரி மக்கள் சாலை மறியல்.!

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் அடுத்த குந்துகால் மீனவ கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதுடன், கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் மழை நீர் இடுப்பளவு நிற்பதால் அப்பகுதிக்கு மக்கள் செல்ல முடியாமல் கடும் அவதி அடந்து வருவதால், தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து குந்துகால் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தரவை தோப்பு, குந்துகால் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மீனவ கிராமங்களுக்குள் புகுந்த மழை நீரால் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சமையலறை உள்ளிட்டவைகள் நீர் புகுந்துள்ளதால் சமைக்க முடியாமல் மிகுந்த அவதி அடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பல ஆண்டுகளாக மழைநீர் தேங்கும் பிரச்சனை அப்பகுதிக்கு இருந்து வரும் நிலையில் டிட்வா புயல் காரணமாக வழக்கத்தை கட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெளியேற முடியாமல் உள்ளது

ஒவ்வொரு முறையும் மாவட்ட நிர்வாகத்திடம் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க தருமாறு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த பகுதியில் தேங்கி வரும் மழை நீரை அப்புறப்படுத்தாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்தி சுகாதாரத்துறை சார்பில் மக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து தருவதுடன் பாம்பன் ஊராட்சி மன்றம் சார்பில் இப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!