
ராமநாதபுரத்தில் வெடிகுண்டு மிரட்டல்… மோப்ப நாயுடன் தீவிர சோதனை பெரும்பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையொட்டி ராமநாதபுரம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய் பிரிவு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் தேவசேனா என்ற மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்ற வாகனங்கள் மற்றும் ஆட்சியரின் இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் சிக்கவில்லை. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.