திருமங்கலத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் காரணமாக அக்.18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- அக்டோபர் 17 அன்று தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.
- செங்கோட்டையிலிருந்து 07.00 காலை மணிக்கு புறப்படும் மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06662) விருதுநகர் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06665) மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு விருதுநகரில் இருந்து புறப்படும்.
- திருநெல்வேலி – ஈரோடு விரைவு ரயில் (16846) விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு 50 நிமிடங்கள் காலதாமதமாக திண்டுக்கல் சென்று சேரும்.

- நாகர்கோவில் – மும்பை விரைவு ரயில் (16340) விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு 57 நிமிடங்கள் கால தாமதமாக திண்டுக்கல் சென்று சேரும்.
- நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில் (16321) நாகர்கோவில் – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கலில் இருந்து இயக்கப்படும். கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
- திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627) மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு திருநெல்வேலிக்கு 120 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) 25 நிமிடங்கள் காலதாமதமாக திண்டுக்கல் சென்று சேரும்.
- பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

- இணை ரயிலான பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் தாமதமாக வருவதால் திருச்செந்தூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06677) திருநெல்வேலியில் இருந்து 50 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.10 மணிக்கு புறப்படும். இதன் காரணமாக மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06677) 25 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலியில் இருந்து இரவு 07.10 மணிக்கு புறப்படும்.
- அக்டோபர் 17 அன்று குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128) விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு 100 நிமிடங்கள் காலமாக திருச்சி சென்று சேரும். என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.