களத்தில் இறங்கிய கன்னியாகுமரி வேட்பாளர்கள்! மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு!

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் மலைகளை உடைத்து கனிமங்களை கேரளாவிற்கு கடத்துவதை முற்றிலுமாக தடுக்கவும், குழிப்பாறைகள் மட்டும் குறிப்பிட்ட அளவு எடுத்து உள்ளூர் மக்களுக்கு டெம்போக்களில் குறைந்த விலைக்கு அரசே வழங்க கோரியும், திங்கள் சந்தை – கருங்கல் பிரதான சாலையில் இடிக்கப்பட்டுள்ள திக்கணங்கோடு பாலத்தை விரைந்து சீரமைக்க கோரியும், பேச்சிப்பாறை பெயர் பலகை கொண்டு இயங்கும் தடம் எண் 86G ,331 மற்றும் 86 போன்ற பேருந்துகள் பேச்சிப்பாறை பேருந்து நிலையம் வரை இயக்கக் கோரியும், சித்திரங்கோடு குலசேகரம் குண்டும் குழியுமான
சாலையை விரைந்து சீரமைக்க கோரியும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 2026 பத்மநாபபுரம் சட்டமன்ற வேட்பாளர் சீலன் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் தமிழ்புலி விஜூ, 2026 கன்னியாகுமரி சட்டமன்ற வேட்பாளர் மரிய ஜெனிபர், மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
தக்கலை வடக்கு மாவட்ட செயலாளர் அனீஷ், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் தர்மராஜ், திருவட்டார் வடக்கு மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு செயலாளர் விஜின், கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளர்கள் விஜேஷ், செல்லத்தாயி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.