பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவர் ஆன பிறகு, நான் தலைவர் என்று சொல்லட்டும், அரவக்குறிச்சியில் போட்டியிட்டு மக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் அண்ணாமலை என்பதை மறந்து விடக்கூடாது. சினிமாவில் வடிவேலு , நான் ரவுடி நான் ரவுடி என்பது போல் நான் தலைவன் நான் தலைவன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மகளிர் தின விழாவினை ஒட்டி இப்பள்ளியில் கடந்த மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கு செயற்கைக்கோள் மென்பொருள் தயாரித்து உறுதுணையாக செயல்பட்ட 10 மாணவிகளை பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கிய விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பின் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் , பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் , அதன் பின்பு பஞ்சாயத்து தலைவர் என்று சொல்லட்டும் , இதனிடையே நான்தான் தலைவர் , நான் தான் தலைவர் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மேலும் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை , அங்குள்ள மக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் என்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் திருமங்கலம் – விமான நிலையச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தற்போதுள்ள திமுக அரசு அதற்கான பணிகளை செய்வதற்கு மும்முரம் காட்டி வருகிறது எனவும் , கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் , எம்எல்ஏவாகவும் உள்ள ஆர் பி உதயகுமார் மூன்று முறை பூமி பூஜை செய்து, ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது எனவும்,திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்வது குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிதி கட்கரியிடம் பேசி இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஏப்ரல் மாதம் ஆகும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளதால், அப்போது அதற்கான தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.