சாதா சரக்கு அடிச்சாலே வீரம் வரும்.. ‘வீரன்’ சரக்கு அடிச்சா..? எப்படி இருக்கும்… கண்டனத்தை குவிக்கும் நெட்டிசன்கள்.!

சாதா சரக்கு அடிச்சாலே வீரம் வரும்.. ‘வீரன்’ சரக்கு அடிச்சா..? எப்படி இருக்கும்… கண்டனத்தை குவிக்கும் நெட்டிசன்கள்.!

தமிழ்நாடு அரசு நிர்வகித்து வரும் டாஸ்மாக் சார்பில், தமிழ்நாடு எங்கும் மதுபானம் அரசு அங்கீகரித்த விற்பனை நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் சீரழிகிறது, மதுபான கடைகளை மூட வேண்டும் என ஒருபக்கம் நீண்டகால கோரிக்கையும் இருந்து வருகிறது.

குழந்தையின் பிறப்பில் தொடங்கி இறப்பு வரை ஊழல் இருக்கிறது என மதுரை நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்ததுபோல், இன்றளவில் குழந்தையின் பிறப்பில் தொடங்கி ஒருவரின் இறப்பு வரை கொண்டாட்டங்களுக்கு மதுவே முதல் மதிப்பை தரும் இடத்தை பெற்றுவிட்டது.

அதற்கு இளம் தலைமுறையின் மது மீதான மோகமும், பண்டிகை காலங்களில் கோடிக்கணக்கில் டாஸ்மாக்குக்கு கிடைக்கும் இலாபமும் அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த சரக்கு பாட்டில்களுக்கு மத்தியில், வீரன் என்ற பெயரில் மதுபான பாட்டில் வெளியாகியுள்ளது. இதனை தமிழ்ப்பற்று என வரவேற்பதா? மதுபான கடையை மூட வேண்டிய நிலையில் இருந்துகொண்டு வீரன் என்ற பெயரில் புதிய மதுவகையை அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பதா? என்பது தெரியாமல் பலரும் விழிபிதுங்கி இருக்கின்றனர்.

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலனை கெடுக்கும்.. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உடல்நலனுக்கும் கேடுதரும்!

நம்ம மொழியில் அச்சடிக்கப்பட்ட சரக்கு அறிமுகம்:

விஷத்துக்கு பெயர் வீரனா?..

வீரனை குடித்தால் என்ன ஆகுமோ?..

Note: இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!