அன்னைத் தமிழில் அர்ச்சனை- ஸ்டாலின் செய்யமாட்டார் ஆனால் சீமான் செய்துவிட்டார்.

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு”என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கவிருக்கிறது.

அதனை முன்னிட்டு, 1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான இன்று (செப்டம்பர் 3) காலை 10 மணியளவில் திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு!” நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!