நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் குளறுபடி… வேறு சின்னம் விரும்பும் சீமான்.

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் குளறுபடி… வேறு சின்னம் விரும்பும் சீமான்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. கரும்பு விவசாயி சின்னத்திற்கு சிக்கல் ஏற்பட்டதால் சின்னம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி பரப்புரை செய்து வந்தது. மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதே போல சுயேட்சை கட்சிகளுக்கு எந்த எந்த சின்னம் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை மாலை சென்னையில் அறிமுகம் செய்து வைக்க இருந்த நிலையில் தற்போது தேர்ந்த ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கியது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வேண்டாம் ஆட்டோ, தீப்பட்டி, படகு, கப்பல் உள்ளிட்ட சின்னங்களில் ஏதேனும் ஒன்றை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!