
நாம் தமிழர் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பின் போது திடீரென திரும்பி செய்த செயல்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளரான இளம் வயது மருத்துவர் கௌசிக் மைக் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
கூத்தியார்குண்டு மற்றும் தோப்பூர் பகுதியில் பொதுமக்கள் முதியவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் என பலரும் நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் அதைத் தொடர்ந்து நடை பயணமாக சென்று தோப்பூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தூரத்திலிருந்து ஒரு சிறுமி ஆரத்தி தட்டை ஏந்திக் கொண்டு ஓடி வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தார் இச்சம்பவம் பார்ப்போரை நெகழ்ச்சியடையச் செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.