Indian cough syrups:இந்த கம்பெனி இருமல் டானிக் வாங்காதிங்க.! 66 குழந்தைகள் இறந்துட்டாங்க? அலறி துடிக்கும் WHO

66 குழந்தைகள் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இதற்க்கு  இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில்  சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் Maiden Pharmaceuticals Limited தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் அவர்கள் மரணம் அடைந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் உயிரிழப்பிற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளது. 

எந்த எந்த மருந்துகள்

1.Promethazine Oral Solution,
2.Kofexmalin Baby Cough Syrup
3.Makoff Baby Cough Syrup
4.Magrip N Cold Syrup 

ஆகிய மருந்துகளை வாங்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், “காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு கொடிய மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்புக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்சினை ஏற்படுவதற்கும், 66 குழந்தைகள் உயரிழந்ததற்கும், இந்த 4 மருந்தும் வழிவகை செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும்  ஹரியானா நிறுவனம் தயாரித்த இந்த மருந்துகளில் மனிதர்களால் ஏற்க முடியாத அளவுக்கு வேதிபொருட்கள் கலந்து இருந்ததுதான் உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

டை எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் ஆகியவைதான் மரணத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காம்பியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இம்மருந்துகள் உயிராபத்துகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் அச்சப்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக விரைவில் உலக சுகாதார அமைப்பு விசாரணை அறிக்கையை வெளியிடும் என தகவல் கூறப்படுகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!