
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
மாராத்தான் ஓட்டப்பந்தய வரலாறு:
கிரேக்கத்தில் நிலவும் ஒரு மரபு வழிக் கதையின் படி, கி.மு. 490 ம் ஆண்டு, பெர்சியர்கள் கிரேக்க நாட்டை ஆக்கிரமித்த போது, மாரத்தான் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப்போது, கிரேக்கர்கள் வென்ற செய்தியினை ஒரு கிரேக்க வீரர் மாரத்தனிலிருந்து, ஏதென்ஸ்க்கு ஓடியே வந்து தெரிவித்து, மயங்கி விழுந்து, உயிர் நீத்தார். மாரத்தான் முதல் ஏதென்ஸ் வரை தூரமானது 25 மைல்கள் அல்லது கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள்.
எனவே, ஒலிம்பிக்ஸ் போட்டி மறுபடி 1896ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது, இது 40 கிலோமீட்டர் என நிறுவப்பட்டது. ஆனால், பின்னர், 1908ம் ஆண்டு, லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற போது, மாரத்தான் போட்டியின் தூரமானது பிரிட்டிஷ் ராஜ வம்சத்தினருக்காக நீட்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, வின்ஸ்டர் கோட்டையிலிருந்து, ஒலிம்பிக் விளையாட்டரங்கின் ராஜ வம்சத்தினர் அமரும் இடம் வரை. அது 26.2 மைல்கள் என இருந்தது. அதுவே தொடர்ந்து விட்டது. 1921ம் ஆண்டு, அதுவே அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது.
மாநில அளவிலான மராத்தான் ஓட்டப்பந்தயம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத் தந்தை அறிவாசான் அண்ணல் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ராதாபுரம் தொகுதி பணகுடி நகரம் நடத்தும் மாபெரும் மாநில அளவிலான ஆண், பெண் இருபாலருக்குமான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.
14.04.2023 அன்று காலை 6 மணிக்கு கூடங்குளம் முதல் பணகுடி பேருந்து நிலையத்தில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும், முதல்பரிசு – 15000 ரூபாய், இரண்டாம் பரிசு – 11000 ரூபாய், மூன்றாம் பரிசு 8000 ரூபாய், நான்காம் பரிசு – 5000 ரூபாய், ஆறாம் பரிசு – 2000 ரூபாய், ஏழாம் பரிசு – 2000 ரூபாய், எட்டாம் பரிசு – 2000 ரூபாயும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழும், எல்லை கோட்டை கடக்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும், அனைத்து பரிசுகளுக்கும் வெற்றி கோப்பை வழங்கப்படும், முன்பதிவுக்கு கடைசி நாள்-12.04.2023, போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரும் மருந்துவச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9677551739, 9787070744, 6374796122.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.