காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சிகளை சார்ந்த சுமார் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் !
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி சேக்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திற்பரப்பு பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் பால் ரத்தினம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக கட்சியை சார்ந்த சுமார் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் ஜஸ்டின் ராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்வை தொகுதி வணிகர் பாசறை இணை செயலர் ஜோஸ், திற்பரப்பு பேரூர் செயலாளர் பால்மர், பொருளாளர் மெர்லின் கிகின்ஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தொகுதி செயலாளர் சீலன் வரவேற்புரையாற்றினார் .
தொகுதி தலைவர் ஆல்ட்ரின் மோசஸ், இணை செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட செயலாளர் ஆன்றலின் சுஜித்,
மண்டல செயலாளர் ஜெகநாதன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிம்லர், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்..
குமரி மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் அனீஷ்,
மத்திய மாவட்ட பொருளாளர் மெர்லின் ஜோஸ், மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலர் காட்வின், இணை செயலர் மெல்ஜின்,
குளச்சல் தொகுதி செயலாளர் ஜாண் பீட்டர், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலர் சுபின், பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் பாசறை செயலர் சாஜி, தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலர் செல்ஜின் பெனட், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை இணை செயலர் சுரேஷ், மாணவர் பாசறை செயலாளர் எபின் கிரகம், விலவூர் பேரூர் தகவல் தொழில்நுட்ப இணை செயலர் ராஜா, வேர்கிளம்பி பேரூர் துணை தலைவர் ரத்தினராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.