ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஐந்தாம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எட்டாம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலை பொருத்தவரை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
அதே சமயத்தில் களத்தில் திமுக vs நாம் தமிழர் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சிலர், கட்சி துண்டுடன், கட்சிக்கொடியுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காணொளி ஒன்றை, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு யாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
இதற்கிடையே வெளியான ஒரு தகவலின் படி, ஆளும் திமுகவுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.