ஈரோடு கிழக்கு MLA ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

அதனையடுத்து, அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பா மேனகா நவநீத கிருஷ்ணன் போட்டியிட்டார்கள்.தி.மு.க ஆதரவுடன் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தென்னரசு விட 60,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதனையடுத்து, எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.

இந்தநிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனையடுத்து, சென்னை போரூரிலுள்ள ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தான் எம்.எல்.ஏ.வாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!