
கொடியேற்று நிகழ்ச்சிக்காக வந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பொதுமக்கள் இல்லாததை கண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்தவர்கள் மீது அதிருப்தியடைந்தார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி வாடிப்பட்டி செல்லக்குளம் சானாம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் கொடியேற்றினார்.
மூன்று மணிக்கு வருவதாக இருந்த கே எஸ் அழகிரி ஆறு மணி ஆகியும் வராததால் நிர்வாகிகள் பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக கலைந்து சென்றனர் பின்னர் ஒரு வழியாக மாலை 6 மணி அளவில் வாடிப்பட்டிக்கு வந்து சேர்ந்தார் ஆனால் அப்போது திடீரென சூறை காற்றுடன் கனமழை பெய்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பின்னர் வாடிப்பட்டியில் கொடியேற்றி விட்டு அருகில் உள்ள செல்ல குளத்தில்.கொடியேற்றும் போது 10 பேருக்கும் குறைவானவர்கள் இருந்ததால் கே எஸ் அழகிரி வாடிப்பட்டிநிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி அடைந்தார். இதேபோல் சானாம்படடியிலும் மிக குறைவானவர்கள் இருந்ததால் மாவட்டத் தலைவர் மற்றும் வாடிப்பட்டி வட்டார தலைவர் மீதும், கடும் அதிருப்தி அடைந்தார். வாடிப்பட்டி பகுதியில் மழை பெய்ததில் தெருவிளக்குகள் அனைத்தும் அணைந்து இருந்தது. ஜெனரேட்டர் வசதி கூட செய்யவில்லை இதனால் மாநிலத் தலைவர் இருட்டில் கொடி ஏற்றிச் சென்றார். மாநிலத் தலைவரை நிகழ்ச்சிக்கு அழைக்கும் மாவட்ட வட்டார நிர்வாகிகள் ஒரு முன்னேற்பாடு கூட செய்யாதது குறித்து மற்ற கட்சியினர் கூறுகையில் ஒரு மாநில கட்சியின் தலைவர் வரும்போது அதற்கான சரியான முன்னேற்பாடுகள் செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி சென்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.