100 நாள் வேலை சம்பளம் இனி 400 ரூபாய்… விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர்  K.K.S.S.R. தீவிர வாக்கு சேகரிப்பு!

100 நாள் வேலை சம்பளம் இனி 400 ரூபாய்… விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர்  K.K.S.S.R. தீவிர வாக்கு சேகரிப்பு!

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள், புதுவையில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. அந்தந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்  நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளராக தேசிய முற்போக்கு திராவிட  கழகத்தின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் , திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாணிக்கம் தாகூர்,  பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக ராதிகா சரத்குமார், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்  நாம் தமிழர் கட்சியின்  வேட்பாளராக மருத்துவர் கௌஷிக்  மற்றும் இதர சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஆறு தொகுதிகளில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து விருதுநகர் நாடாளுநாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர்  K.K.S.S.R. இராமச்சந்திரன் சாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நம்ம காங்கிரஸ் கட்சி தான் மேலே வரப்போகுது,  கட்டாயமாக மாணிக்கம் தாகூர் மந்திரி ஆவார்கட்டாயமாக மாணிக்கம் தாகூர் மந்திரி ஆவார், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக கொண்டு வரப்படும், 100 நாள் வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சம்பளம் 400 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படும் என திறந்த வெளி வேனில் நின்று பொதுமக்களிடம் பேசி தீவிர பிரச்சாரம் செய்து  “கை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!