பாஜக போராட்டம்-எச்.ராஜா திடீர் கைது!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் வைத்து போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.பாஜக மூத்த தலைவராக இருப்பவர் எச் ராஜா. இவர் பாஜக சார்பில் நடக்கும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்த வேளையில் எச் ராஜா, ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை அவர் விமர்சனம் செய்தார்.
மேலும் மதுரையில் நேற்று நடந்த அம்பேத்கர் மனு அளிக்கும் போராட்டத்தில் எச் ராஜா பங்கேற்று இரந்தார்.அப்போது எச் ராஜா, ‛‛பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியேற வேண்டும். தமிழகத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திமுக அரசு செலவு செய்யவில்லை. பட்டியலின மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறை இல்லை” என காட்டமாக விமர்சித்து இருந்தார்.இந்நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எச் ராஜா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எச் ராஜா பங்கேற்றால் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் எச் ராஜா பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் எச் ராஜா இன்று தனது காரில் திண்டிவனம் பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து பெரம்பலூர் திருமாந்துறையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர். அதன்படி அங்கு காரில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து அவர் அங்குள்ள மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவினர் திருமாந்துறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்
தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.