தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவராக இருந்த அக்கா மேதகு தமிழிசை அவர்கள் தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி?
மாண்புமிகு அமைச்சர் முருகன் அவர்கள் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி? -எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்.
இரு தினங்களுக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “நான் தோசை, இட்லி சுடுவதற்கு வரவில்லை என பேட்டி அளித்திருந்தார்.

அதை கிண்டல் செய்யும் விதமாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் @BJPtamilagam தலைவராக இருந்த அக்கா மேதகு @DrTamilisaiGuv அவர்கள் தோசை, இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? மாண்புமிகு @Murugan_MoS அவர்கள் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி?மேதகு ஆளுநர் தமிழிசை அவர்களையும் மாண்புமிகு அமைச்சர் எல். முருகன் அவர்களையும் அவமானப்படுத்திய தம்பி அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். வி காளமேகம் – மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.