ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில் அமமுக கட்சி தங்களது வேட்பாளரால ஏ.எம்.சிவபிரசாந்தை அறிவித்தனர். இதை அடுத்து அமமுக சார்பில் சிவபிரசாந்த் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அமமுக கட்சி வேட்பாளர் சிவபிரசாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்.அதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வாபஸ் பெற்றுள்ளார். ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செந்தில்முருகன் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது அமமுக வேட்பாளரும் வாபஸ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு இடைத்தேர்தலில் அமுமுக போட்டியிடவில்லை என்று டிடிவி தினகரன் திடீரென அறிவித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அமமுகவின் ஆதரவு யாருக்கு என்று அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.