உங்கள் வீட்டில் மரம் இருக்கா? உடனே இதைச் செய்யுங்க… அழகிய பரிசை பெறுங்க!

உங்கள் வீட்டில் மரம் இருக்கா? உடனே இதைச் செய்யுங்க… அழகிய பரிசை பெறுங்க!

வரலாறு காணாத வகையில் சுட்டெரிக்கும் வெயில் பூமி வெப்பமாகி வருவதை நன்கு உணர்த்துகிறது.

கோடி நன்மைகள் செய்யும் மரங்களை பேணி பாதுகாப்பது நம் கடமை.. மரங்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வமுடையவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி பட்ட உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் பாராட்டும் வகையில் ‘லெமூரியா நியூஸ் தமிழ்’ டிஜிட்டல் நியூஸ் மீடியா குழுமத்தில் சார்பாக தங்களுக்கு அழகிய பரிசு ஒன்று தருகிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

கீழ்கண்ட படத்தை க்ளிக் செய்து உங்கள் வீட்டில் உள்ள மரத்தை செல்பி புகைப்படமாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்

வரலாறு காணாத வகையில் சுட்டெரிக்கும் வெயில் பூமி வெப்பமாகி வருவதை நன்கு உணர்த்துகிறது.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலுக்கு அதிகமான மரங்களை வெட்டுதல், நகரமய மாக்கல், மக்கள் தொகை பெருக்கம், மின்சாதனங்கள் பயன்பாடு, நான்கு வழிச்சாலைகள் மற்றும் எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள் தான் காரணம். தற்போது தமிழகத்தில் பாலைவனத்திற்கு நிகரான வெப்பநிலை நிலவுகிறது.
சொல்லப்போனால் ஒரு காலத்தில் பாலைவனப் பகுதிகளில்தான் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். காலப்போக்கில் தமிழகம் பாலைவனம் போல் மாறிவருகிறது. இந்தாண்டு தமிழகத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகும்.

யார் காரணம்

மனிதர்களும், மனிதர்களின் செயல்பாடுகளும் தான் இந்த நிலைக்கு காரணம். காலத்தால் இந்த வெப்ப நிலை குறைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக இருந்த மரங்களின் எண்ணிக்கை கால் பங்காகி விட்டது.


மரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்த காற்றை உள்வாங்கி புதிய காற்றை வெளிவிடுகிறது. மண் அரிப்பை தடுத்து நிலத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்து, காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. நாம் வாழ மட்டுமின்றி பறவைகள், பூச்சிகள், விலங்குகளுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. மழைக்கு முக்கிய காரணங்களே மரங்கள்தான். அவை அழிந்து வருவதால் மழை காணாமல் போய் வருகிறது.

நாம் உயிர் வாழ காற்று அவசியம். அந்த காற்றில் 21 சதவீதம் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் இருக்கிறது. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்து கொண்டு நமக்கு தேவையான ஆக்சிஜனை தருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவை என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி வருகிறோம். இதனால் காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

ஏப்ரல் பூ(கூ)ல் கோடை காலம் வந்தால் மட்டும் தான் நமக்கெல்லாம் மரங்களை பற்றிய ஞாபகம் வரும். சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் ‘ஏப்ரல் பூல்’ தினத்திற்கு ‘ஏப்ரல் கூல்’ என பெயர் வைத்து மரங்களை நட்டு வைக்கும் கலாசாரம் உருவாகி வருகிறது. மரங்களை நட்டு வைத்தால் மட்டும் போதுமா… அவை பிற உயிர்களை வாழ வைக்க உயிர்ப்புடன் வளர விடுவதும் நம் கையில் தான் இருக்கிறது.

உண்மையில் சொல்லப்போனால் இன்னும் எஞ்சி இருக்கும் மரங்களால் தான் நாம் உயிர் வாழ முடிகிறது. காற்றை சுவாசிக்க முடிகிறது. நம் வாழ்க்கையில் மரங்களின் பங்கு எண்ணற்றது. கோடை காலத்தில் நிழலை, காற்றாடியை, ஏ.சி.,யை தேடி செல்லும் நாம்… வாழ உதவியாக இருக்கும் மரங்களை பாதுகாப்பதும் அவசியம் தான்.மரங்களை பாதுகாக்கலாம்மார்ச் முதல் மே வரை கோடை காலம் தான்.

இந்த காலங்களில் கடும் வறட்சிக்கு பஞ்சம் இருக்காது. நீர் நிலைகள் வறண்டு போய், வான் மழைக்கு ஏங்கும். விவசாயம், உணவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த சமயங்களில் மரங்களுக்கு தண்ணீர் கொடுப்பதும், நட்டு வளர்ப்பதும் அவ்வளவு சுலபமில்லை. வரப்பு ஓரங்களில் இருக்கும் மரங்களுக்கு வயலுக்கு பாய்ச்சும் தண்ணீர் போதுமானது. ரோட்டோரம், வீட்டின் அருகே இருக்கும் மரங்களுக்கு குறைந்தது பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் மரக்கன்றுகள் நடுவதை தவிர்க்கலாம்.

இந்த சமயத்தில் மரம் நடுவது தண்ணீரை வீணடிப்பதோடு, பண இழப்பையும் ஏற்படுத்தும். புதிதாக நடும் மரக்கன்றுகள் கோடை காலத்தில் வேர்ப்பிடித்து வளர்வதற்கு மிகுந்த சிரமப்படும். அதனால் மரக்கன்றுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அந்த சமயத்தில் பயிர் விதைப்பது போல், மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் அசைக்க முடியாத மரமாக வளரும். காரணம் அச்சமயம் பெய்யும் பருவ மழை மரத்திற்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். இதனால் சாதாரண நாட்களில் நாம் கொடுக்கும் தண்ணீரை விட, வேகமாக மழைநீரை உறிஞ்சி வளரும். எனவே, கோடை காலத்தில் மரக்கன்றுகளை நடுவது என்பது தேவையில்லாத வேலை. இந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் மரங்களை பாதுகாப்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும்.

கோடி நன்மைகள் செய்யும் மரங்களை பேணி பாதுகாப்பது நம் கடமை.. மரங்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வமுடையவர்கள் பலர் இருக்கின்றனர். நீங்களும் அந்த பட்டியலில் சேர உடனே மரம் நட்டு வளருங்க..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!