சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தின்னூரில் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பிரவீண்குமார்(31).மனைவியை பிரிந்து வாழும் பிரவீண்குமார் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 14 வயது சிறுமியை காதல் வளையில் வீழ்த்தி உள்ளார்.
பின்னர் சிறுமியை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி கர்பமாக்கியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் கருகலைப்புச் செய்ய அழைத்து சென்றுள்ளார்.இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரவீண்குமாரை குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!