Child Kidnap: மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்..!

மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்..!

நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த சுந்தரி என்பவரின் 6 மாத பெண் குழந்தையான சத்யபிரியா மதுரை ரயில் நிலையம் வெளியே கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாயுடன் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கடத்திச் சென்றதாக தகவல் தெரியவந்துள்ளது. சுந்தரி அருகில் படுத்துக்கொண்டிருந்த மர்ம நபர் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலையத்தில் வெளிப்புறத்தில் உறங்கிகொண்டிருந்தபோது மர்ம பெண் ஒருவர் தான் சித்திரை திருவிழாவிற்கு வந்துள்ளதாக கூறி அருகில் உறங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியாவை (6மாதம்) காணவில்லை என கூறி திலகர்திடல் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரயில்வே நிலையத்தில் படுத்து உறங்கிய குழந்தை கடத்தப்பட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!