திருப்பரங்குன்றம் தேரோட்டம்… கிரேன் மூலம் திருத்தேரை அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்…

திருப்பரங்குன்றம் தேரோட்டம்… திருத்தேரை அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்…

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 5-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழாவானது 15 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தினமும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாரணம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க பல்லாக்கு, வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முக்கிய நிகழ்வான வெள்ளி யானை வாகனத்தில் கடந்த 11 -ஆம் தேதி கைப்பாரம் தூக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து., 10 ஆம் நாளான நேற்று சூரசம்கார லீலையானது 7 மணிக்கு நடைபெற்றது. இதை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர், முன்னதாக சுப்ரமணியசுவாமி தங்க மயில் வாகனத்தில் தெய்வானை அம்மனுடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தனர்.

தொடர்ந்து., சன்னதி தெருவில் அமைத்துள்ள சொக்கநாதர் கோவில் முன்பு கோவில் பட்டர் வீரபாகு சுவாமியிடமிருந்து சுரசம்ஹார லீலையை காண வந்த பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்., அதனை தொடர்ந்து சுரசம்ஹார லீலையானது நடைபெற்றது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதி தெருவில் நின்று கண்டு மகிழ்ந்தனர். நாளை பங்குனி திருவிழாக்களான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 -ம்தேதி சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை திருக்கல்யாணம் வைபோகமும்., உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் முன்பாக உள்ள திருத்தேரை கிரேன் உதவியுடன் அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!