திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா 3-ம் திருநாள்!

திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா 3-ம் திருநாள்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினந்தோறும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சன்னதி. தெரு பெரிய ரதவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் தினந்தோறும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவது வழக்கம்.

பங்குனித் திருவிழாவின் மூன்றாவது நாளாக அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18- ம் தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும்
19-ஆம் தேதி பெரிய தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!