
மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அய்யனார் கோவில் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால் மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகாவில் நிறைய கண்மாய்களில் தண்ணீரை உறிஞ்சும் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது. மேலும் செடிகளின் இலைகள், பூக்கள் போன்றவை தண்ணீரில் அழுகி மாசடைகிறது. அய்யனார் கோவில் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
இந்த செடிகள் முழுவதும் நிரம்பி உள்ளதால் இவற்றின் இலைகள் தண்ணீருக்குள் விழுந்து அழுகி துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீரின் நிறத்தையே மாற்றி விடுகிறது. கண்மாய்களில் குளிப்பவர்களுக்கு பல்வேறு தோல் வியாதிகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்மாயில் தண்ணீரை உறிஞ்சி விடுவதால் நீரின் அளவு குறைகிறது.

இதை தவிர்க்க கண்மாய்களில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல முறை மனு அளிக்கப்பட்டும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் இன்று அவனியாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.