ஐயப்பனுக்கு மாலை அணிந்து வந்த மாணவர்களை வெளியே அமர வைத்த பள்ளி நிர்வாகம்… மதுரையில் பெற்றோர்கள் அதிர்ச்சி!

விரதத்திற்காக மாலை அணிந்து வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர வைப்பு – பல்லோட்டி பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் புகார்!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலையில் அமைந்துள்ள பல்லோட்டி மேல்நிலைப் பள்ளியின் பில்லர் வளாகத்தில், விரதத்திற்காக மாலை அணிந்து பள்ளிக்கு வந்த 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமர வைத்ததாகப் பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் எஸ். தர்ஷன் மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் எஸ். நிவின் சாய் ஆகிய இரு மாணவர்களும் சமய வழிபாட்டிற்காக மாலை அணிந்து பள்ளிக்குச் சென்றுள்ளனர். முறையான பள்ளிச் சீருடையில், விபூதி, குங்குமம் இன்றி, காலணிகளும் அணிந்து சென்றிருந்த நிலையில், மாலை அணிந்திருந்த காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் கடந்த இரண்டு நாட்களாக வெளியே அமர வைத்ததாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்வி கற்கச் சென்ற மாணவர்களை மாலை அணிந்ததற்காக வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் வகுப்பறையில் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!