
திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனை ஆதரித்து வீதி வீதியாக பிரச்சாரம்!
ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான முருகன் திருக்கோயில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க., சார்பில் முதல் பெண் வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டியன் மு க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இக்கட்சியின் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருக்கிறார். ஏற்கனவே மாவட்ட கவுன்சிலராகவும் இருந்தவர். தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தனக்கன்குளம் சீதாலட்சுமி மில் கேட் அருகில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் போது, ”முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிருக்கு உரிமைத்தொகை, மாணவர்களுக்கு லேப்டாப், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண் திட்டம், கட்டணமில்லா பஸ் பயணம், மக்களை தேடி மருத்துவம் என எண்ணற்ற திட்டங்களால் தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. இந்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம். திருப்பரங்குன்றம் தொகுதி பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற நிச்சயம் சட்டசபையில் குரல் கொடுப்பேன் என்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகிகள் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள வார்டுகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடன் துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.