
ராஜன் செல்லப்பா முக்கிய பொறுப்பில் அமர்வார்… திருப்பரங்குன்றத்தில் அண்ணாமலை பிரச்சாரம்!
திருப்பரங்குன்றம் 16 மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் மேயர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தவர்.
திமுக அரசு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தாமல் தீபம் ஏற்ற தடையை ஏற்படுத்தியது. மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பீகாபில் நிதிஷ்குமார் போன்றவர்கள் மத்திய அரசு இணைந்து சென்றதால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார். அண்ணன் ராஜன் செல்லப்பா முக்கிய பொறுப்பில் அமர்வார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கையை அரசு அனுப்பாமல் பத்து லட்சம் மக்கள் வாழும் பகுதி என வரைவை அனுப்பியது.
மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மனுவை திருப்பி அனுப்பி அதில் விரிப்பான அறிக்கையை தயார் சொன்னதற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் நிராகரிக்கிறது என குற்றம் சாட்டினர்.

மெட்ரோ ரயில் திட்டதிற்கு மதுரை மாவட்டத்தில் 20 லட்டசத்திற்கு மேல் உள்ள மக்கள் தொகை குறித்து விரிவான அறிக்கையை அனுப்பி பெட்ரோல் வாயில் திட்டத்தை மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவுடன் கொண்டு வருவோம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு முறையானமரங்கள் மற்றும் தூய்மை பணியை ஏற்படுத்தாமல் 8 மாதங்கள் தடையை ஏற்படுத்தியது.
.
1200 கோடி கோடி மதிப்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் திட்டத்தை காலதாமதம் ஏற்படுத்தியதால் 2200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டது அதையும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து எய்ம்ஸ் மருத்துவமனை வரும் நவம்பர் மாதத்திற்குள் பணிகள் முடித்து இறுதியாக திறக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பார் அதில் அண்ணன் ராஜன் செல்லப்பாவும் கலந்து கொள்வார்.

நீதிமன்ற தீர்ப்பை ஏற்காத மக்கள் விரோத திமுக அரசை மக்கள் 23ஆம் தேதி வாக்களித்து மே மாதம் தேதி விரட்டியுங்கள்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற தடையை ஏற்படுத்திய இந்த அரசை அகற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் ராஜன் செல்லப்பாவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வெற்றியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருப்பரங்குன்றம் பதினாறு மண்டபத்தில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.