
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கைமனு வழங்கினர் முள்ளிபள்ளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் இரண்டாவது பஸ் ஸ்டாப் வடக்குத்தெரு மற்றும் சங்கையாகோயில் உள்ளிட்ட இடங்களில் அருகில் உயர்மட்ட மின்விளக்கு அமைத்தல்நாடக மேடை அருகிலுள்ள புது தெருவில் மின்விளக்கு மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி இணை செயலாளர் மதன் பிள்ளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம் வழங்கினார் உடன் மாவட்ட நிர்வாகிகள் தங்க ராஜா ராஜபாண்டி விக்னேஷ் நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.