
“எதுவான போதும் நமக்காக விடிகிற பொழுது மாறுமோ?” மதுரை இளம்பெண் பெருமிதம்!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தெத்தூர் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் மாலதி ராமகிருஷ்ணன், “இளம் அதிக தொழில்நுட்ப காப்புரிமை பெற்ற இந்திய பெண்மணி – 2026” என்ற பிரிவில் India Book of Records-ல் இடம்பெற்று விருது பெற்றுள்ளார்.
சாதாரண கிராம பின்னணியில் வளர்ந்த மாலதி, தனது தாய் சந்திரா மற்றும் தாத்தா-பாட்டி ராஜாமணி, பாப்பு ஆகியோரின் அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட வளர்ப்பில் உயர்ந்துள்ளார். மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் கல்வி கற்ற அவர், 2015ஆம் ஆண்டு பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது சின்னத் தாத்தா மற்றும் முன்னாள் உணவு பகுப்பாய்வாளரான த ஈஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலுடன் VIT பல்கலைக்கழகத்தின் “STAR” திட்டத்தின் மூலம் 100% கல்வி உதவியுடன் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
2019ஆம் ஆண்டு Dell என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்த மாலதி, தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கி, 44க்கும் மேற்பட்ட காப்புரிமை யோசனைகளை பெற்றுள்ளார். தற்போது ஜப்பானில் Toyota நிறுவனத்தில் Senior Software Engineer ஆக பணியாற்றி வருகிறார். அவருடைய கணவர் விஜய் ஜப்பானில் HONDA நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தனது சாதனைகளுக்கு இணையாக, சமூகப் பொறுப்பையும் உணர்ந்த மாலதி, தனது கிராமத்து மாணவர்களுக்கு கல்வி உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். தனது தாத்தா ஈஸ்வரன் அவர்களுடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஆதரவு அளித்து வருகிறார். அதில் 2 மாணவர்கள் தற்போது இளநிலை பொறியியல் படித்து வருவதுடன், மேலும் 4 மாணவர்கள் உயர் கல்விக்குத் தயாராகி வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு இளநிலை கல்வி உதவிகள் வழங்க முன்வருவோரை கரங்கள் கோப்பி வனகுவதாகவும் கூறினார்.
“எதுவான போதும் நமக்காக விடிகிற பொழுது மாறுமோ?” என்று கூறிய மாலதி, தனது தாத்தா ஈஸ்வரன் அவர்களுக்கும், VIT பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் விஸ்வநாதன் அவர்களுக்கும், கணவர் விஜய் அவர்களுக்கும், தனது தாயார் சந்திரா மேலும் தனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
சிறிய கிராமத்தில் தொடங்கிய அவரது பயணம், இன்று சர்வதேச அளவில் பெருமையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.